அகமுடையாரில் பிரிவுகள் ஏதும் பெரிதாக எடுத்துக்கொள்ளப்படாவிட்டாலும் வாழும் இடத்தைப் பொறுத்து அகமுடையார்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் உள்ள பட்டத்தை வகுத்துக் கொள்கிறார்கள்.அந்த வகையில் தென்மாவட்டத்தில் (சிவகங்கை,இராமநாதபுரம்(ராம்நாட்),மதுரை,திருமங்கலம்,விருதுநகர்,தேனி,திண்டுக்கல்,வாடிப்பட்டி,புதுக்கோட்டை) பகுதியில் வாழும் அகமுடையார்கள் இராஜகுல அகமுடையார் என்று அழைக்கப்படுகின்றனர்.
இவர்கள் மேற்கூறிய பகுதிகளில் சேர்வை(சேர்வார்/சேர்வைக்காரர்/சேர்வாரன்/சேர்வைக்காரன்) மற்றும் தேவர் பட்டங்களைப் பயன்படுத்து வருகிறார்கள்!
அகமுடையார் இனம் என்பது உலகம் முழுதும் ஒரே இனமாக அறியப்பட்டாலும் தென்மாவட்டத்தில் உள்ள அகமுடையார்கள் மட்டும் இராஜகுல அகமுடையார் என்று அழைக்கப்படுவதன் காரணம் தென்மாவட்டத்தில் வாழ்ந்த அகமுடையார்களே தங்கள் பூர்வத் தொழிலான அரசமரபுக்குரிய காவல்பணியை தொடர்ந்து* மிகச் சமீப காலம் வரை) கடைபிடித்து வந்ததேயாகும்!
அகம்படி என்பது அரசமரபுக்குரிய பெயராகவும் இவர்களின் தொழில் நாட்டையும் மக்களையும் காக்கும் காவல் செய் (காவலானாகிய அரசனின்) கடன் என்பதினாலும் சுமார் 5000 வருடங்களுக்கும் மேலாக காவல் பணி என்பது அகமுடையார்களின் குலத்தொழிலாக இருந்துள்ளது!
அரசப்பிரிதிநிதிகளாகவும் , போர்வீரர்களாகவும் அரசர்களால் அனுப்பப்பட்ட அகமுடையார்கள் வடதமிழகத்திலிருந்தும்,சோழநாட்டிலிருந்தும்,கேரளாவில் இருந்து என பல்வேறு பகுதிகளிலிருந்தும் இன்று வாழும் தென் தமிழ்நாட்டிற்குள்(பாண்டிய நாட்டிற்குள்) புகுந்தனர்.
போர்தொழிலும்,காவலும் பயின்றுவந்த அகமுடையார்கள் இன்றிலிருந்து 1800 வருடங்களுக்கு முன்பு (சரியாக சொல்வதென்றால் கி.பி 8ம் நூற்றாண்டில்) வேளாளான்மைக்குள் நுழைந்து பெரும் நிலக்கிழார்களாக எழுச்சியுற்றனர்.
பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு இடங்களில் உள்ள அகமுடையார்களும் தங்கள் பூர்வீக தொழிலிருந்து நழவிப்போக, தென்மாவட்ட அகமுடையார்களில் பெரும்பாலானோர் தங்கள் பூர்வீகத் தொழிலை சமீப காலம் வரை விடாப்பிடியாக செய்து வந்துள்ளனர்
ஏற்கனவே கூறியது போல் தொழிலை மாற்றிக் கொன்டதால் உயர்குடி வேளாளர்களாக மாறிப்போன அகமுடையார்கள் தங்கள் அடையாளத்தை மாற்றிக் கொள்ள முனைய ,பூர்வதொழிலான போரையும் காவலையும் தொடர்ந்து செய்துவந்த தென்பகுதி அகமுடையார்கள் முன்னே கூறியவர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டிக் கொள்ளவும் தாங்களே உண்மை அரசகுடிகள் என்பதை அறிதியிடும் வகையிலும் தங்களை இராஜகுல அகமுடையர் என்று இன்றும் அழைத்துக் கொள்கின்றனர்.
அகமுடையர்
அகம்முடையார்
அகம் உடையார்
அகமுடியர்
அகமுடியார்
அகம்படியர் ,அகம்படியார்
சேர்வை,சேர்வார்,சேர்வைக்காரர்,சேர்வாரன்,சேர்வான்
Rajakula Agamudayar History
sivagangai,viruthunagar,madurai,Ramanathapuram(Ramnad),Thirumangalam(Tirumangalam),Pudukottai
servai(Servaikaran/Servaikarar),Thevar(Devar)
- 4Shares
4
Facebook Comments